ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (18:28 IST)

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு: இது கமல் பாலிசி!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட மக்கள் நீதி மய்யம் தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என பகிரங்கமாக அறிவித்தார். 
 
மேலும், திமுக, அதிமுக போன்ற கட்சிகளுடன் நிச்சயம் கூட்டணி இல்லை என தெரிவித்தார். இந்நிலையில் கமலின் இந்த முடிவு குறித்து அவரது கட்சி தரப்பில் கூறப்படும் சில விஷயங்கள் பின்வருமாறு, 
 
ஊழலுக்கு எதிரான கட்சி என்பதுதான் எங்களின் கொள்கை. எனவே கமலின் இந்த முவை வரவேற்கிறோம். இப்படி தனித்து போட்டியிடுவதன் மூலம்தான் எங்கள் கட்சியின் முழு பலம் தெரியும். அரசியலில் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதை இதன் மூலம் அறிய முடியும். 
 
போட்டிடப்போகும் 40 தொகுதிகளில் 10 - 15 இடம் கிடைத்தாலும் சரி, அது எங்களுக்கு பெருமைதான். இருக்கும் கட்சியிலேயே புதுக்கட்சி மக்கள் நீதி மய்யம்தான். அதனால் எடுத்தவுடன் எல்லா தொகுதிகளிலும் வெற்றி என்பது சாத்தியம் இல்லை என தெரிவிக்கின்றன.