1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 பிப்ரவரி 2019 (16:13 IST)

மோடி 5 நாள் பயணம் – வெளிநாடு இல்லை உள்நாட்டில்தான் !

தேர்தலை முன்னிட்டு நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு மோடி 10 மாநிலங்களுக்குப் பயணம் செய்ய இருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக வின் படுதோல்வியை அடுத்து மீண்டும் தனது பலத்தைக் கட்சிக்குள்ளாகவும் வெளியிலும் நிரூபிக்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளார் மோடி. அதையடுத்து இந்த நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்.

நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு 10 மாநிலங்களில் நடைபெறும் பாஜக வின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறார். முதலில் நாளை பிப்ரவரி 8 ஆம் தேதி சத்தீஸ்கர், மேற்கு வங்கம்  மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கு சென்று கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

இரண்டாம் நாளான பிப்ரவரி 9ஆம் தேதி கவுகாத்தி, அருணாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் நடக்கும் விழாக்கள் மற்றும் கூட்டங்களில் கலந்துகொள்ள இருக்கிறார்.

பிப்ரவரி 10ஆம் தேதி திருப்பூர் ,கர்நாடகாவின் ஹுப்பள்ளி மற்றும் ஆந்திராவின் குண்டூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 11 ஆம் தேதி உத்திர பிரதேசம் மாநிலம் மற்றும் 12 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ராவுக்கும் செல்ல இருக்கிறார்.