1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (11:07 IST)

சசிகலாபுஷ்பா எம்.பி பயணம் செய்த விமானத்தில் திடீர் கோளாறு: பரபரப்பு தகவல்

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக எம்பியான சசிகலாபுஷ்பா தற்போது தினகரன் அணியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மறுதிருமணம் உள்பட அடிக்கடி பரபரப்பான செய்தியில் இருக்கும் சசிகலா புஷ்பா இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் விமானம் ஒன்றில் பயணம் செய்ய இருந்தார்
 
இந்த நிலையில் விமானம் கிளம்புவதற்காக ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சசிகலாபுஷ்பா பயணம் செய்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விமான ஊழியர்கள் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்து விமானத்தை நிறுத்தினர். அதன்பின்னர் விமான நிலைய ஊழியர்கள் இயந்திர கோளாறை கண்டுபிடித்து அதனை துரிதமாக சரிசெய்தனர். இதனால் சசிகலாபுஷ்பா உள்பட அந்த விமானத்தில் பயணம் செய்த 80 பயணிகள் உயிர்தப்பினர்.
 
இதையடுத்து அந்த விமானம் சுமார் மூன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டது. விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்த விமான ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.