1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (20:06 IST)

நேரத்திற்கு முன்பே புறப்பட்ட விமானம்; வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நடன இயக்குநர்

ஜெய்ப்பூரில் இருந்து இன்று மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நடன இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
இண்டிகோ விமானம் இன்று அதிகாலை 4.52 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இண்டிகோ கால் சென்டருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. மர்ம நபர் ஒருவர்  ஜெய்ப்பூரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
 
விமானம் புறப்பட்டதால் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விவரங்களை கவனிக்கும் சிறப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போதிய பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. 
 
பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான காவல்துறையினர் விசாரணை மெற்கொண்டதில், விமானத்தை தவறவிட்ட பயணி ஒருவர் விரத்தில் இவ்வாறு செய்தது தெரியவந்தது.
 
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மோகித் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், மோகித் குமார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.