மும்பையில் கட்டிடத்தில் மோதி விமானம் விபத்து; வைரல் வீடியோ

Flight Crash
Last Updated: வியாழன், 28 ஜூன் 2018 (15:08 IST)
மும்பை காட்கோபர் பகுதியில் கட்டிடத்தில் மோதி விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் காட்கோபர் பகுதியில் கட்டிடம் ஒன்றைல் மேல் பகுதியில் மோதி விபத்துள்ளானது. இதில் அந்த விமானம் தீ பிடித்து எரிந்தது.
 
விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் மருத்துவமனை உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் மோதிய கட்டிடம் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் என்றும் அதில் தற்போது கட்டிட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
விமானம் விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நன்றி: Lokmat News

webdunia

இதில் மேலும் படிக்கவும் :