1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 மே 2023 (10:32 IST)

2028ஆம் ஆண்டு தான் மதுரை எய்ம்ஸ் தொடங்கும்.. அமைச்சரின் அதிர்ச்சி தகவல்..!

AIIMS

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028 ஆம் ஆண்டு தான் செயல்பட தொடங்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை குறித்த தொடக்க விழா நடந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டுமான பணிகளை தொடங்கவில்லை. இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் தான் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான டெண்டர் குறித்த அறிவிப்பு வெளியேறும் என்றும் அதன்பிறகு அடுத்த ஆண்டு கட்டிட பணிகள் தொடங்கி 2028 ஆம் ஆண்டு கட்டிட பணிகள் முடிவடைந்து எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்கப்படும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று அமைச்சர் கூறி இருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran