வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (16:13 IST)

ஊதியம் தராததால் ஊழியர்கள் போராட்டம்...7 பேர் தற்கொலை முயற்சி

amuthasurabi
புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபியில்  5 வருடங்களாக ஊதியம் தரவில்லை என 7 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபியில்  வருடமாக ஊதியம் தரவில்லை என்று கூறி ஊழியர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி யூனியனில் முதல்வர் ஆர்.என்.ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு, அர்சு சார்பு நிறுவனமான அமுதசுரபியில் சுமார் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த  ஆண்டுகளாகவே ஊதிய உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

எனவே நிலுவையில் உள்ள 30 மாத சம்பளத்தை வழங்கக்கோரி கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அரசு எந்த  நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று காந்திவீதியில் உள்ள அமுதசுரபி அலுவலகத்திற்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வந்தனர், அதில், 7 பேர் தாங்கள் மறைத்துவைத்திருந்த விஷதிதை எடுத்து குடித்தனர்.

உடனே அருகிலுள்ளோர் அவர்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.