மதுரையில் இன்று மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!
உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக மதுரையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று சித்திரை திருவிழாவின் முக்கிய நாளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
இன்று காலை 8. 35 முதல் 8. 59 மணி வரை இந்த திருக்கல்யாணம் நடைபெற இருப்பதாக கோவில் அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில் இன்று அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு குறித்து உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மீனாட்சி திருக்கல்யாணத்தை அடுத்து திருத்தேர் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் இருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மதுரைக்கு பக்தர்கள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva