1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (18:02 IST)

சூப்பர் சிங்கர் பிரியங்காவிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய விஜய் டிவி பிரபலம்

சூப்பர் சிங்கர் பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மாலை சூடி மஞ்சம் தேடி என்ற அவர் பாடிய பாடலுக்கு ரசிகர்கள் ஆரவார வரவேற்போடு பாராட்டினார்.
 

ஒரே பாடலில் ஓஹோ பேபியாக உயர்ந்த பிரியங்கா. விஜய் டி.வி-யின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில்  ‘சின்னச் சின்ன வண்ணக் குயில்...’ என்ற பாடல் யூடியூபில் வைரலாகி வலம் வந்தது. பிறகு விஜய் டி.வி-யின் சிறந்த பாடகிக்கான விருதினைப் பெற்றார் பிரியங்கா.

இந்நிலையில் மீண்டும் விஜய் டிவிக்கு வந்த பிரியங்கா "அங்கே இடி முழுங்குது"என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முந்தைய வெற்றியாளர் ஆனந்த் அரவிந்தாக்‌ஷுடன் 'வாடி வாடி நாட்டுக்கட்ட"  பாடலை சேர்ந்து பாடினர்.

அப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் பிரபலம்  "என்னமா ராமர்" இப்பாடலின் வரிகளை சொல்லி இரட்டை அர்த்தமாகவே பேச நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்  மா.கா.பா மற்றும் பிரியங்கா அரட்டை அடித்தனர்.

ஏற்கனவே ராமர் நிகழ்ச்சிகள் முழுக்க இரட்டை அர்த்தங்களாகவே பேசி வந்தார் பிறகு அதை மறுத்து சில நாட்கள் அமைதி காத்து இப்போது  மீண்டும் அதை தொடங்கியுள்ளார் ராமர்.