Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினிமா என நினைத்தீர்களா? ; விளாசிய நீதிபதி ; திணறிய ஜெய்

சனி, 7 அக்டோபர் 2017 (15:44 IST)

Widgets Magazine

இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்த நடிகர் ஜெய்யை நீதிபதி சராமாரியாக கேள்வி எழுப்பினார்.


 

 
நடிகர் ஜெய், கடந்த மாதம் 21-ஆம் தேதி குடி போதையில் தன்னுடைய விலை உயர்ந்த ஆடி காரை அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து அவர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. ஜெய் ஏற்படுத்திய விபத்து குடிபோதையில் நடைபெற்றது என்பதால் எவ்வித சமரசமும் இல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து கைது செய்து ஜாமீனில் விடுவித்தது காவல்துறை.  
 
அந்த வழக்கின் விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. விசாரணையின்போது ஜெய் நேரில் ஆஜராகி, குற்றப்பத்திரிகையின் நகலைப் பெற்றுக் கொண்டார்.  அதனையடுத்து அந்த வழக்கின் விசாரணை கடந்த 6ம் தேதியும் நடைபெற்றது. ஆனால், ஜெய் ஆஜராவில்லை. எனவே, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்தனர். 
 
இந்நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், வேறு வழியின்றி இன்று காலை சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஜெய் ஆஜரானார். 
 
அப்போது ‘ வாழ்க்கையும் சினிமா போல் நினைத்தீர்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் ஏதும் கூற முடியாமல் அமைதியாக நின்றார் ஜெய். அதன் பின், உங்கள் காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா? எனக் கேட்டார். அதற்கு ஜெய் ‘ஆமாம்’ என பதிலளித்தார்.
 
கருப்பு ஸ்டிக்கர் அகற்றப்பட வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. அதை ஏன் அகற்றவில்லை? அதற்காக அவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யாமல் இருக்கிறீர்கள்? என போலீசாரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பான் மற்றும் ஆதார் தேவையில்லை; ஜிஎஸ்டி மாற்றங்கள்: முழு விவரம் உள்ளே...

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வரும் விதமாக கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி ...

news

நிலாவில் மீண்டும் கால் பதிக்க காத்திருக்கும் நாசா

பல வருடங்களுக்கு பின் நாசா நிலாவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கையில் ...

news

கீழே உட்கார வைத்து அவமதித்த எடப்பாடி: அதிருப்தியில் ஓபிஎஸ்!

தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த ...

news

சசிகலா - நடராஜன் - மருத்துவமனையில் உருக்கமான சந்திப்பு

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா இன்று காலை தனது கணவர் நடராஜனை மருத்துவமனையில் சந்தித்தார்.

Widgets Magazine Widgets Magazine