Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதி துரைசாமி அதிரடி மாற்றம்!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதி துரைசாமி அதிரடி மாற்றம்!


Caston| Last Updated: திங்கள், 2 அக்டோபர் 2017 (09:48 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் அதிமுக கொறடா பரிந்துரையின் பேரில் தகுதி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து எம்எல்ஏக்கள் தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 
 
இந்த வழக்கை நீதிபதி துரைசாமி விசாரித்து வந்தார். கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகரால் காலி என்று அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிப்பு எதையும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து வழக்கை அக்டோபர் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 
அக்டோபர் 3-ஆம் தேதி (நாளை) உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுதல் ஆக வாய்ப்புள்ளது என அப்போதே பேசப்பட்டது. இந்நிலையில் இந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்த நீதிபதி துரைசாமி இந்த வழக்கில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக புதிய நீதிபதியாக ரவிச்சந்திரபாபு விசாரிப்பார் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் வாதங்களை எழுத்துப்பூர்வமான வாதங்களாக வைக்க நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிபதி மாற்றம் இந்த வழக்கின் போக்கை எப்படி கொண்டு செல்லும், இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பதை அறிய பலரும் காத்திருக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :