செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (10:45 IST)

2 குழந்தைகளுக்கு மேல் பெற்று பதவி இழந்த நீதிபதிகள்

மத்திய பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


 

 
மத்திய பிரதேச மாநிலத்தில் நீதித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டம் அமலில் உள்ளது.
 
இந்த சட்டத்தின் கீழ் தற்போது முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குவாலியர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி மனோஜ்குமார் என்பவரும், கபல்பூர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி அஷ்ரப் அலி என்பவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் இருவரும் சட்டத்தை மீறி மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டதால் போபால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தி இருவரையும் பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.