1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2023 (10:18 IST)

அமைச்சர்களின் வழக்கை தானாக முன்வந்து நடத்திய நீதிபதி இடமாற்றம்..!

அமைச்சர்கள் பொன்முடி மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர்களின் வழக்குகளை தானாக முன்வந்து மேல் முறையீடு வழக்காக மாற்றிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நீதிபதி ஜெயச்சந்திரன் என்பவர் எம்பி எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தானாக முன்வந்து அமைச்சர்களின் வழக்கை விசாரணை செய்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran