1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (15:34 IST)

”ஸ்டாலின் குறுக்கு புத்தியில் பேசுகிறார்” பொங்கும் ஜெயகுமார்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றப்போவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவர் குறுக்கு புத்தியில் பேசுகிறார் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

சிறப்பு அந்தஸ்து தருவதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக அரசு கொல்லைப்புறம் வழியாக மத்திய அரசிடம் ஒப்படைக்கவும், அண்ணா பெயரை அகற்றவும் குழு அமைத்திருப்பதாக சந்தேகம் எழுகிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணா பல்கலைகழகத்தின் பெயர் மாற்றப்படாது” என கூறியுள்ளார். மேலும் ஸ்டாலின் குறுக்குப்புத்தியில் பேசுகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.