ரஜினி வயதானவரா ? அப்ப உங்கள் அப்பா ! - உதயநிதியிடம் கராத்தே தியாகராஜன் கேள்வி
ரஜினியை வயதான பெரியவர் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததற்கு முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் நடக்கும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார் . அதில் ‘எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரின் இந்த பதிவை கேலி செய்யும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘தலைவர் ஸ்டாலின் தலைமையில் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு வன்முறை என்று அஞ்சும் வயதான வசதியான பெரியவர்களை சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவிட்டு வரவும்’ என்று கூற திமுகவில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே இதனால் மோதல் போக்கு உருவானது.
உதயநிதியின் இந்த கருத்து தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் ‘ரஜினியை வயதான பெரியவர் என்று சொல்லித்தான் அந்த பீட் போடப்பட்டு இருப்பதாக திமுகவினரை ஒத்துக் கொண்டுள்ளனர் .திமுக தலைவர் ஸ்டாலின் தான் வயதானவர் எடப்பாடி இடம் போய் தோற்று உள்ளார் இப்போதைய ஆரோக்கியம் இல்லாமல் உள்ளார். அவரது மனைவி அவருக்காக கோவில் கோவிலாக சென்று வருகிறார். ஆகவே அவரது அப்பாவை பற்றித்தான் உதயநிதி கூறியிருப்பார். ‘ எனத் தெரிவித்துள்ளார்.