மைதானத்தை அதிர விட்ட அமைச்சர்... கிரிக்கெட் விளையாடி அசத்தல்

jeyakumar
Last Modified புதன், 13 பிப்ரவரி 2019 (12:54 IST)
தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எந்த விமர்சனங்களுக்கும் தக்க பதிலடி கொடுப்பவர். இன்று காலையில் சென்னை மாநில கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அவர் கிரிக்கெட்  விளையாடிய காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலையில் சென்னை  மாநில கல்லூரிக்கு சென்றார். அப்போது அவருடன் அதிகாரிகளும் இருந்தனர். மைதனத்துக்குள் சென்ற அவர் மாணர்வர்களிடம் மட்டையை வாங்கி கெத்தாக களத்தில், கிரீஸில் நின்றார்.
 
பின்னர் மாணவர் ஒருவர் வீசிய பந்துக்கு அசத்தலாக அடித்து விளையாடினார்.தொடர்ந்து மாணவர் பந்து வீச... அதற்கு சரியாக மட்டையை பயன்படுத்தி விளாசினார்.
jeyakumar
சுற்றி நின்ற அதிகாரிகள் அமைச்சரை உற்சாகப்படுத்த அவர் தொடர்ந்து பேட்டிங் செய்தார்.இது அங்குள்ள மாணவர்களுக்கு முதலில் அதிர்ச்சியை அளித்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு அவருக்கு பந்து வீசினர்.தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :