திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 பிப்ரவரி 2019 (15:26 IST)

இருட்டறையில் முரட்டு குத்து பட இயக்குனரின் அடுத்த கில்மா...!

ஒரே ஒரு அடல்ட்  படத்தின்மூலம் ஓட்டுமொத்த இளசுகளையும் கட்டி இழுத்தவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். 


 
கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஹர ஹர மஹாதேவிக்கி’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இளம் ரசிகர்களை கூண்டோடு கவர்ந்தவர் இயக்குனர் சினிமாவின் பி ஜெயக்குமார். அதற்கு பிறகு  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்தார். 
 
அதனை தொடர்ந்து ஆர்யா மற்றும் ஷாயிஷா நடிப்பில் காமெடி கதைக்களத்தில் வெளியான ‘கஜினிகாந்த்’ படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.  அடல்ட் படத்தை தவிர வேறு எந்த ஜானரில் படம் எடுத்தாலும் அது நமக்கு சரிபட்டுவராது என்பதை சுதாரித்துக்கொண்ட  ஜெயக்குமார் தற்போது மீண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்து வருகிறார். 


 
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.இந்த படத்திலும் இயக்குனருக்கு கைராசியான நடிகர் கௌதம் கார்த்திக் 3வது  முறையாக இணையவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல்  தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘  தீமை தான் வெல்லும் ‘ என்று பெயரிட்டுள்ளனர். 
 
காமெடி திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. டி இமான் இசையமைக்கும் இப்படத்தில்  ஆச்சர்யம் என்னவென்றால், கதாநாயகியே இல்லாமல் இப்படத்தை இயக்கவிருக்கிறார்களாம் . இதை கேட்டவுடன் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் படத்தில் கண்டிப்பாக  ஏதேனும் ஒரு ட்விஸ்ட் இருக்கும் என நம்பப்படுகிறது. ஏனென்றால், இது சந்தோஷ் பி ஜெயக்குமாரின் படமல்லவா...!