அரசுக்கு மட்டும் என்ன வானில் இருந்தா பணம் கொட்டுகிறது? ஜெயக்குமார் கேள்வி!!


Sugapriya Prakash| Last Updated: ஞாயிறு, 12 நவம்பர் 2017 (10:42 IST)
சில தினங்கலுக்கு முன்னர் நடைபெற்ற கவுகாத்தியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். 

 
 
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பற்றி அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 266 பொருட்களின் வரி 28% இருந்து 18% குறைக்கப்பட்டுள்ளது. 57 பொருட்கள் மீதான வரி 12, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியில் கொண்டு வரக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு செய்தால் மாநில அரசின் வருவாய்க்கு பெரும் இழப்பு ஏற்படும். 
 
தமிழகத்தை பொறுத்தவரையில் சலுகைகள், மானியங்கள் வழங்குவதற்கே ஆண்டுக்கு ரூ.77 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. இப்படி இருக்கையில், மாநிலத்துக்கு வரி இழப்பு ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்? அரசுக்கு மட்டும் பணம் என்ன வானில் இருந்தா கொட்டுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதோடு வருமான வரி சோதனைக்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருமான வரித்துறை உள்ளது என தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :