தொடர்புடைய செய்திகள்
- தேமுதிகதான் நம்ம ஜாதி.. கேப்டன்தான் கடவுள்.. சத்ரியனாக நேரம் வந்துவிட்டது – விஜய பிரபாகரன் முழக்கம்!
- அதிமுகவை வீழ்த்துவோம்.. வீதிகளில் தேமுதிகவினர் கூச்சல்! – எல்.கே.சுதீஷ் காட்டம்!
- அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது தேமுதிக! – அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அரசியலில் பரபரப்பு!
- அதிமுக - அமமுக கூட்டணி சாத்தியமா?
- பெண்கள் பாதுகாப்புக்கு உறுதி அளித்த ஓபிஎஸ்!
தேமுதிக லட்சனம் போன தேர்தலலே தெரிஞ்சுப்போச்சு... ஜெயகுமார் !
அதிமுகவை கடுமையாக விமர்சித்து வரும் தேமுதிகவை சாடியுள்ளார் அமைச்சர் ஜெயகுமார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் ஜெயகுமார், நன்றி மறந்து தேமுதிக பேசக்கூடாது. தேமுதிகவினர் பேசுவதை விட என்னாலும் வெளுத்துக்கட்ட முடியும். கூட்டணி தர்மம் என்ற அடிப்படையிலேயே மவுனமாக இருக்கிறோம். தேமுதிக பலம் கடந்த தேர்தலிலேயே தெரிந்துவிட்டது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் அந்த கட்சிக்கே பாதிப்பு. எடப்பாடி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என கூறினார்.
