1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMDK left from ADMK alliance

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது தேமுதிக! – அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அரசியலில் பரபரப்பு!

Tamilndu
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேமுதிக தற்போது கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக, பாமக ஆகிய கட்சிகள் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஆனால் தேமுதிக – அதிமுக கூட்டணி உறுதியாவதில் மட்டும் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்த தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூன்று கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தாலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அதிமுகவை வீழ்த்துவோம்.. வீதிகளில் தேமுதிகவினர் கூச்சல்! – எல்.கே.சுதீஷ் காட்டம்!