1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (15:29 IST)

மனைவியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கணவன் செய்த லீலை: புரட்டியெடுத்த போலீஸ்

ஒரத்தநாட்டில் மனைவிக்கு தெரியாமல் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரத்தநாடு காவராப்பட்டையை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மனைவி கதாமணி. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனது முதலே சிகாமணி வரதட்சணை கேட்டு அவரது மனைவியை கொடுமைபடுத்தி வந்துள்ளார். இதனால் கதாமணி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சமீபத்தில் சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் சிகாமணி தனது மனைவிக்கு தெரியாமல், வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனையறிந்த கதாமணி, தன் கணவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சிகாமணியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.