விஷாலின் வருங்கால மனைவி இப்படிபட்டவரா?

Last Modified புதன், 13 பிப்ரவரி 2019 (09:04 IST)
நடிகர் விஷால் தனது வருங்கால மனைவி அனிஷா குறித்து ரகசியம் சொல்லி இருக்கிறார்.
 
தமிழ்ப் பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால் . இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில் வெளியானது. அனிஷா அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
 
இதற்கிடையே விஷால் அனிஷாவை பற்றின நமக்கு தெரியாத விஷயங்களை கூறியுள்ளார். அனிஷா தேசிய அளவு கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவகி.  மிகவும் தைரியமான பெண். எல்லாவற்றிலும் பயங்கரமானது அனிஷா புலிக்கு பயிற்சி அளித்து வருகிறார். முதலில் இதனைக் கேட்டதும் நான் பேரதிர்ச்சி அடைந்தேன் என விஷால் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :