வெளிநாடு சென்ற மனைவி; தந்தையின் காமத்துக்கு இரையான மகள்

abuse
Last Modified புதன், 13 பிப்ரவரி 2019 (18:35 IST)
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சொந்த மகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த தந்தையால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 
 
வேதாரண்யம் அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு திருமணமாகி 2 மகள்களும் உள்ளனர். மனைவி வேலைக்காக வெளிநாடு சென்று தங்கியுள்ளார். 
 
இதனால், பாஸ்கர் தனது முதல் மகளிடம் அடிக்கடி பாலியல் சீண்டல்கலில் ஈடுப்பட்டுள்ளார். தந்தை தன்னிடம் இப்படி நடந்துக்கொள்வதால் மனவேதனையில் இருந்ததோடு தந்தையிடம் இவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டாம் என கெஞ்சியும் உள்ளார். 
 
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மகளை திடீரென பலவந்தமாக பாஸ்கர் கற்பழித்துள்ளார். இதனால், வேரு வழியின்றி இது குறித்து வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
 
அதன் பின்னர் பாஸ்கரனை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :