1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , சனி, 1 ஜூன் 2024 (14:56 IST)

துர்க்கையம்மன் கோவில் திருவிழாவை மரபு வழிபடி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,மேட்டு நிரேத்தான்  கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.
 
இக்கோவிலில், ஆண்டு தோறும் நடைபெற்று வரும்  வைகாசி  திருவிழாவில் பல ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் ஒருகிணைந்து ஒற்றுமையோடு திருவிழா வழிபாடு செய்து வந்தநிலையில், அனைத்து சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு கோவில் மரியாதை என்ற பெயரில் சாதியை சொல்லி அழைத்து  விபூதி கொடுத்து வருவதை ஒன்றுக்கு மேற்பட்ட  மற்ற  சமுதாயத்தை சார்ந்தவர்கள்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
இந்நிலையில், கிராமத்தில் உள்ள சமுதாயங்களுக்கிடையே சாதி மோதல் உருவாகும் சூழல் நிலைவியதால், கடந்த 17./5.2023 அன்று வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தலைமையில் சமதான கூட்டம் நடந்தபோது முடிவு எட்டப்படாததால், திருவிழா
நடத்த தடை விதிக்கபப்பட்டது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற சமுதாய பிரிவுகளை சேர்ந்த சிலர் துர்க்கையம்மன் கோவில் திருவிழா நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
 
மேலும், அதே சமுதாயத்தினர்   துர்க்கையம்மன் கோவில் வைகாசி திருவிழா நடத்த கொடியேற்றத்துடன்  திருவிழா வேலைகளை ஆரம்பித்தநிலையில், இது குறித்து, எதிர்தரப்பை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50.க்கு மேற்பட்டோர்.
 
நேற்று முன்தினம் வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தியிடம் நேரில் சென்று  மனு கொடுத்து முறையிட்டனர்.
 
இதனையடுத்து, மேட்டுநீரேத்தான்  கோவில் திருவிழா   சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளதால் , உயர் நீதிமன்ற உத்திரவுக்கு  பின்னால் திருவிழா குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என,  மனு அளித்தவர்களிடம். வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தெரிவித்து இருந்த நிலையில், நேற்று காலை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிரிவினர் மற்றும் எதிர்ப்பு பிரிவினர் என இருதரப்பை   சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100.க்கு மேற்பட்டோர்
தாசில்தார் அலுவலக வளாகத்திற்கு குவிந்தனர். இதன் பின் இரு தரப்பபை சேர்ந்தவர்களை அழைத்து  தாசில்தார் மூர்த்தி  சமாதானம் பேச்சுவார்த்தை நடத்திய போது, கடந்த 22.5.2024.அன்று மரபு வழியில் திருவிழா நடத்த  உயர்நீதிமன்ற நீதியரசர்  மஞ்சுளா அளித்த தீர்ப்பு நகலை ஒரு தரப்பினர் கொடுத்தனர்.
 
இதையெடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பு உத்திரவு படி ஜுன் 3-4-5 ஆகிய தேதிகளில்  துர்க்
கையம்மன கோவில் வைகாசி திருவிழா நடத்த தாசில்தார் மூர்த்தி அனுமதியளித்தார்.