வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , சனி, 25 மே 2024 (12:45 IST)

விமான நிலைய சாலையில் பொதுமக்கள் சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு மாநகராட்சி அதிகாரிகள் சமரச நடவடிக்கையடுத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது!

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு  மாநகராட்சி வார்டு 84-வது வார்டு பகுதியில் தற்போது பெய்த தொடர் மழையில் சாக்கடை நீர் செல்லாமல் குளம் போல் தேங்கியுள்ளது.
 
இதனை தொடர்ந்து 84 வார்டு பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரியிடம்  பல்வேறு முறை முறையிட்டும்  நடவடிக்கை எடுக்காததால்  திடீரென மதுரை விமான நிலைய சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
இதனை தொடர்ந்து அவனியாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணி குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மார்ட்டின் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனை தொடர்ந்து விரைவாக சாக்கடை நீரை அகற்றி தூய்மைப்படுத்துவது குறித்து மாநகர ஆட்சி அதிகாரிகள் உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.
 
பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் மதுரை விமான நிலைய சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.