1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 மே 2024 (10:07 IST)

10 வயது சிறுவனை கொலை செய்த 13 வயது சிறுவன்.. மதுரையில் பயங்கர சம்பவம்..!

மதுரை அருகே  பிஹாரைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும், 13 வயது சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் 13 வயது சிறுவன் சமையலுக்குப் பயன் படுத்தும் கத்தியை எடுத்து, 10 வயது சிறுவனை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலை செய்த சிறுவன் சடலத்தை கழிவுநீர் தொட்டியில் போட்டுவிட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
நேற்று முன்தினம் முதல் 10 வயது விடுதிக்கு வர வில்லை என்பதால் அந்த சிறுவனைக் காணவில்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் மேலூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் 13 வயது சிறுவன், 10 வயது சிறுவனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது தாயை 10 வயது சிறுவன் தவறாகப் பேசியதால் கத்தியால் குத்தி கொலை செய்ததாக, 13 வயது சிறுவன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
 
அதன்பின்னர், 10 வயது சிறுவனின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்த13 வயது சிறுவன் தற்போது சிறுவர்கள் கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva