1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 மார்ச் 2024 (17:30 IST)

பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்து விஜய் பட வீடியோக்கள் பதிவேற்றம்!

school department fb page
பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின்  ஃபேஸ்புக் பக்கத்தை இன்று மர்ம நபர்கள் ஹேக் செய்து, அதில், நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை பதிவேற்றியுள்ளனர்.
 
இதுகுறித்த்து, தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில்,  தனியார் பள்ளிகளுக்கு  மர்ம நபர்கள் இமெயில்  மூலம்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.