செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (18:18 IST)

நாளை பிளஸ் 2 தேர்வு ஆரம்பம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு..!

தமிழ்நாட்டில்  நாளை பிளஸ் 2 தேர்வு ஆரம்பமாக உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
இதன்படி தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை 3,58,201 மாணவர்கள், 4,13,998 மாணவிகள், ஓரு திருநங்கை என‌ மொத்தம் 7,72,200 பேர் எழுதுகின்றனர். 
 
இந்த தேர்வுக்காக 154 வினாத்தாள் மையங்களும், 101 விடைத்தாள் சேமிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பாளர் 43,200 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தமிழ்நாட்டில் நாளை தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வை மொத்தம் சுமார் 7.73 லட்சம் பேர் எழுத உள்ளதாகவும் அதில் மாணவியர்  4,13,998 என்றும், மாணவர்கள்  3,58,201 பேர்கள் என்றும், திருநங்கை ஒருவர் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

Edite by Mahendran