வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:36 IST)

தனியார் பள்ளிகளை நாளை திறக்க கூடாது: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!

வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகள் திறக்க கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.  
 
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வரும் 11-ம் தேதி தான் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு முன் தனியார் பள்ளிகள் திறக்க கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
 
 தனியார் பள்ளி இயக்குனர் நாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்  நாளை தனியார் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் இன்னும் ஒரு சில பகுதிகளில் வெள்ளம் வடியாததை அடுத்து பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva