1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (07:31 IST)

கற்பழிப்பு எல்லாம் ஒரு செய்தியே இல்லை: ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை பேச்சு

துக்ளக் இதழின் 50வது ஆண்டுவிழா நேற்று மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது:
 
இங்கிலாந்து நாட்டில் கற்பழிப்பு நம் நாட்டை விட 80 மடங்கு அதிகம் என்றும், அமெரிக்காவில் 30 மடங்கு அதிகம் என்றும், ஆனால் அங்கு கற்பழிப்பு எல்லாம் ஒரு செய்தியே இல்லை என்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மேலும் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பதற்கு காரணம் மரியாதையை குறைத்து உரிமையை அதிகப்படுத்த வேண்டும் என்று பேசுவதுதான் என்றும் துக்ளக் ஆசிரியர் குருமூத்தி கூறியுள்ளார்.
 
தமிழகம் திராவிட கலாச்சாரத்தை அறவே ஒதுக்கிவிட்டது என்றும், தமிழகம் பாரதத்தை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்றும் அந்த அளவிற்கு கலச்சாரம் தமிழகத்திற்கு தேவை என்றும் கூறிய துக்ளக் ஆசிரியர் குருமூத்தி கடந்த 70 ஆண்டுகள் ஆட்சி செய்து இரு திராவிட கழகங்களும் தமிழகத்தை சீரழித்துவிட்டன என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டை மாற்றிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு என்றும், கோயிலுக்கு போவதை அறிவித்துவிட்டு போனவர் எம்.ஜி.ஆர் என்றும் தெரிவித்தார்.
 
சிறைக்கு போய்ட்டு ஒருவர் வெளியில் வந்தால் கூட என் மீது குற்றமில்லை என்றும் என்னை அவர்களுக்கு பிடிக்கவில்லை அதனால்தான் என்னை சிறையில் பிடித்து போட்டுவிட்டனர் என சொல்கின்றனர் என்று ப.சிதம்பரம் அவர்களையும் தாக்கி பேசினார்.