திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2019 (11:05 IST)

ஓபிஎஸ் நீங்க ஆம்பளையா? டிவிட்டரில் நெட்டிசன்கள் அதகளம்!!

#ஓபிஎஸ்நீங்கஆம்பளையா என கேள்வி எழுப்பி டிவிட்டரில் ஹேஷ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது. 
 
துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழா சிறப்பு கூட்டம் நடிபெற்றது. இந்த விழாவில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி, இரண்டாக பிரிந்த அதிமுகவை இணைத்ததில் எனக்கு பங்கு உள்ளது. எனது அறிவுறுத்தலின் படியே மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தியானத்தில் அமர்ந்தார். அதன்பின் கட்சியில் இணைப்பு ஏற்பட்டது. 
 
அதிமுக ஆட்சியை கவிழ்த்தால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துவிடும் என பயந்தேன். ஆனால், ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு மாற்றம் வரும் என என்று பேசினார். இப்படி பேசும் போது இடையில் நீங்க ஏன் ஆம்பளையாக இருக்கிறீர்கள் என கேட்டதாகவும் குறிப்பிட்டார். 
 
இதனால் தற்போது #ஓபிஎஸ்நீங்கஆம்பளையா என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. அதோடு, குருமூர்த்தியின் இந்த பேச்சுக்கு அமைச்சர் ஜெயகுமார், ஒருவர், தான் ஆண் மகன் இல்லை என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனே மற்றவர்களை பார்த்து நீ ஆம்பளையா...? நீ ஆம்பளையா...? என்று கேட்பார்கள். முதலில் இவர் ஆண் மகனா? என்பதற்கு அவர் பதில் சொல்லட்டும் என  பதிலடி கொடுத்துள்ளார்.