துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆண்மகனா? அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை விமர்சனம் செய்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆண்மகனா? என்று அமைச்சர் ஜெயகுமார் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் கூறிய அமைச்சர் ஜெயகுமார், ‘ஒருவர், தான் ஆண் மகன் இல்லை என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனே மற்றவர்களை பார்த்து நீ ஆம்பளையா...? நீ ஆம்பளையா...? என்று கேட்பார்கள். முதலில் இவர் ஆண் மகனா? என்பதற்கு அவர் பதில் சொல்லட்டும்” என்று கூறினார்.
மேலும் துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தியின் பேச்சு ஆணவத்தின் உச்சம், திமிர்வாதம், இவ்வளவு திமிர் கூடாது. நாவடக்கம் தேவை என்றும் பல சந்தர்ப்பங்களில் அதிமுகவின் மீது கைவைத்து அதனால் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அவர் எவ்வளவு வாக்கு வாங்கினார் என்று தெரிந்துவிட்டது என்றும், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் அதே நிலைமைதான் வருங்காலத்தில் அவருக்கும் ஏற்படும்” என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவிதார்,
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சினிமாத் துறையிலும், அரசியலிலும் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள் என்றும் ஆனால் கமல், ரஜினி சினிமாவில் மட்டுமே ஜொலித்த நட்சத்திரங்கள் என்றும் கூறினார்