1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (11:45 IST)

முதல்வரின் துறையில் ஆய்வு நடத்தி கரியை பூசிய ஆளுநர்!

முதல்வரின் துறையில் ஆய்வு நடத்தி கரியை பூசிய ஆளுநர்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் முதல்வர் இருக்கும் போது அவரது துறையை பற்றி அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தியது முதல்வரை அவமானப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.


 
 
நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆளுநர் விதிகளை மீறி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ளார் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
ஆளுநர் கோவையில் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள், குற்ற வழக்குகளில் இன்னும் மீட்கப்பட வேண்டிய பொருட்கள், தலைமறைவு குற்றவாளிகளின் எண்ணிக்கை, பிடிவாரன்ட் நிலுவை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆளுநர் விசாரித்தார் என்றும், ரேஷன் அரிசிக் கடத்தலில் பிடிபட்டுள்ள குற்றவாளிகள் எத்தனை பேர், குண்டர் சட்டத்தில் கைதான நபர்கள் எத்தனை பேர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி எவ்வளவு போன்ற தகவல்களைப் பெற்றார் என்றும் தெரியவருகிறது.
 
தமிழகத்தில் ஒரு முதல்வர் இருக்கும்போது அவரது துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்திருக்கிறார் ஆளுநர். ஆளுநரின் இந்த வரம்பு மீறிய செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்டோர் காண்டனம் தெரிவித்துள்ளனர்.