1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (14:04 IST)

சசிகலா குடும்பத்தினரிடம் பிடிபட்ட வைரங்கள் : மதிப்பிடுவதில் அதிகாரிகள் திணறல்

சசிகலா குடும்பத்தினரிடம் பிடிபட்ட தங்க மற்றும் வைர நகைகள் மலைபோல் குவிந்திருப்பதால் அவற்றை மதிப்பிட முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.


 

 
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் வருமான வரித்துறையினர்  மொத்தம் 187 இடங்களில் நடத்திய சோதனை நேற்று முன்தினம் மாலைதான் முடிவிற்கு வந்தது. இதில், மூட்டைக் கணக்கில் ஆவணங்களும், கிலோ கணக்கில் தங்க மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். மேலும், 60க்கும் அதிகமான போலி நிறுவனங்களை நடத்தி கோடிக்கனக்கில் பணம் குவித்து, தமிழகமெங்கும் பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், 15 வங்கி லக்கார்களை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
வருமான வரித்துறை வட்டாரத்தில் கூறிய போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆராயத்துவங்கினால் ஒன்றில் இருந்து இன்னொன்று என நூறு தொடர்புகள் வருகிறது. அதேபோல், வீடுகளில் கைப்பற்றப்பட்ட வைரக்குவியலை எங்களால் மதிப்பிடமுடியவில்லை. அதற்காக நம்பகமான மதிப்பீட்டாளர்களை தேடி வருகிறோம். இதில், 300 பேருக்கு சம்மன் அனுப்பியதாக வெளியான செய்து அனைத்தும் பொய். பினாமி சொத்து, போலி பரிவர்த்தனை ஆகியவற்றை குறிவைத்தே இந்த சோதனைகளை நடத்தினோம் என தெரிவித்துள்ளனர்.