உண்மையான முதல்வர் ஆளுநர்தான்; எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய கோரிக்கை!

உண்மையான முதல்வர் ஆளுநர்தான்; எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய கோரிக்கை!


Caston| Last Modified புதன், 15 நவம்பர் 2017 (09:27 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்டத்தில் அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வுக்கூட்டம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசியல் மத்திய அரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. தற்போது நடைபெற்ற இதற்கு முன்னர் நடைபெற்ற அதிரடி ரெய்டு நடவடிக்கைகள் இதற்கு சிறந்த சான்றாகும்.
 
இந்நிலையில் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆளுநர் விதிகளை மீறி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ளார் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
ஆளுநரின் இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்டோர் காண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிய போது, தமிழகத்தின் உண்மையான முதல்வராக ஆளுநர்தான் செயல்படுகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :