கொரோனா வைரஸுக்கு Arsenicam Album 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த அரசாணை - தமிழக அரசு

tamilnadu
sinoj| Last Modified செவ்வாய், 19 மே 2020 (17:44 IST)

கொரொனா தாக்கத்தால் நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏற்கனவே வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். ஒருசில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக அரசு கொரோனா தொற்றுக்கு Arsenicam Album 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறியுள்ளதாவது :

Arsenicam Album 30 என்ற ஹோமியோபதி மருந்தை 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட மத்திய ஆயுஷ் அமைச்சகம்
அறிவுறுத்தியுள்ளது.

Arsenicam Album 30 என்ற மருந்து மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :