Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆன கெட் அவுட் கவர்னர்..

Last Updated: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (16:28 IST)
நிர்மலா தேவி விவகாரத்தை தொடர்ந்து ‘தமிழக ஆளுனரே வெளியேறு’ என்கிற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

 
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 
ஆடியோவில் பேசிய நிர்மலாதேவி “பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கேட்கிறார்கள். ஆளுநர் மாளிகை வரை தனக்கு செல்வாக்கு உண்டு எனக்கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
மேலும், முதல்வர் இருக்கும்போது ஆளுநர் ஏன் விசாரணைக் குழு அமைத்துள்ளார்.  சிபிஐ விசாரணையை தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே ஆளுநர் அவசரமாக செயல்பட்டுள்ளார் எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
அதோடு, #(தமிழக ஆளுநரே வெளியேறு) என்கிற ஹேஸ்டேக்கை பிரயோகித்து ஆளுநரை கிண்டலடித்து, அவருக்கு எதிராகவும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்த ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. 
 
கெட்அவுட்மோடி என்கிற ஹேஸ்டேக் சமீபத்தில் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :