வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (19:34 IST)

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பொங்கி எழுந்த தமன்னா

நடிகை தமன்னா பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து டுவிட்டரில் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
 
இந்நியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், உபி மாநிலத்தில் 17 வயது மாணவி ஒருவரை பாஜக எம்.எல்.ஏ செங்கர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கு எதிராக போராடிய அந்த மாணவியின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்டார்
 
இது குறித்து நடிகை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில், ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில் 8 வயது சிறுமியும், மற்றொரு ஊரில் 16 வயது சிறுமியும் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து போராடிய அந்த சிறுமியின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். குற்றவாளியை பாதுகாக்க இப்படி நடந்து இருக்கிறது.
 
நாடு எதை நோக்கி செல்கிறது? இன்னும் எத்தனை பேர் நிர்பயாவை போல் தங்கள் வாழ்வை தியாகம் செய்ய வேண்டுமோ?. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத நாடு பின்னைடவு கொண்டதாகும் என பதிவிட்டுள்ளார்.