டிவிட்டரிலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்...

Last Updated: திங்கள், 16 ஏப்ரல் 2018 (15:41 IST)
பலரும் தனக்கு எதிராகவே எப்போதும் கருத்து தெரிவிப்பதால், நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் டிவிட்டரிலிருந்து வெளியேறியுள்ளார்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பெயரை கெடுத்துக்கொண்டவர் காயத்ரி ரகுராம். குறிப்பாக, அவர் ஓவியாவிடம் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் அவர் மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் இட்ட அனைத்து பதிவுகளையும் நெட்டிசன்கள் கழுவு ஊத்தினர்.
 
ஒருகட்டத்தில் பொறுமையிழந்த காயத்ரி “இனிமேல் கெட்ட வார்த்தை பேசினால் அவர்களுக்கு எதிராக சைபர் கிரைமிடம் புகார் கொடுப்பேன்” என கொதித்தெழுந்தார்.
 
அந்நிலையில், அவரை போலீசார் கைது செய்தது போல் ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால், தான் கடந்த 25 நாட்களாக அமெரிக்காவில் இருப்பதாகவும், இது வதந்தி எனவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இதை செய்கிறது எனவும் அவர் கூறினார். 

 
இந்நிலையில், இனிமேல் எந்த டிவிட்டும் போட மாட்டேன். அதேபோல், எனக்கு ஆதரவு இல்லாதபோது, யாருக்கும் என்னுடைய ஆதரவும் இல்லை. இதுதான் என் கடைசி டிவிட். நான் டிவிட்டரிலிருந்து வெளியேறுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :