1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (15:01 IST)

எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள்

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திரையுலகினரும் இந்தப் போராட்டங்களில்  கலந்துகொண்டு வருகிறார்கள். இன்று சென்னைக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், கறுப்பு பலூன்களை வானில்  பறக்கவிட்டும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த காயத்ரி, இப்போதுள்ள பிரச்சனையையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆதரவு கிடைக்கவில்லை என்பதையும் இணைத்து ட்வீட் செய்துள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நெட்டிசன்கள் பலரும் பதில் அளித்துள்ளனர்.
 
காயத்ரி ட்வீட்டில், பிக்பாஸில் இருந்தபோது என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். தமிழ் பெண்ணான என்னை ஆதரிக்க தமிழ்நாட்டு மக்களிடம் வேண்டியும், சரியானவர் என ஒரு கேரள நடிகையை தேர்வு செய்தீர்கள்? இப்போதும் ஏன் அதையே செய்யவில்லை?" எனக்  கேட்டிருக்கிறார்.
 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒருவர் சிம்பிள் லாஜிக். அவங்க உண்மையா இருந்தாங்க என்றும், எல்லோரும் கர்நாடகாவா தமிழ்நாடான்னு கேக்குறப்போ  நீங்க மட்டும் கேரளாவா தமிழ்நாடான்னு பேசுறீங்களே... அதுக்குத்தான் சப்போர்ட் பண்ணல என்றும், மற்றும் ஒருவர் உங்களை தமிழ்ப்பெண்ணா நாங்க  மதிக்கலைன்னு அர்த்தம் என்று கூறியுள்ளனர்.
 
அதற்கு காய்த்ரி நீங்கள் பிக்பாஸில் என்னை ஆதரிக்கவில்லை, ஏனென்றால் நான் தமிழச்சி என்பதால் கெட்டவள் என்று நினைக்கிறீர்கள். அப்புறம் ஏன் தீய திராவிடக் கட்சிகளை நம்புகிறீர்கள்? நம் அனைவரையும் முட்டாளாக்குவது யார்? தமிழச்சியை விட நீங்கள் கேரளத்தைச் சேர்ந்தவரை பிக்பாஸில் தேர்வு  செய்கிறீர்கள். சாதாரண பிக்பாஸில் சரி எது தவறு எது என அறியும் உங்களுக்கு ஏன் அரசியல் தெரியவில்லை? என்று மறு ட்வீட் செய்திருந்தார். 
இதற்கு ஓவியா ரசிகர் ஒருவர், இது எளிமையான விஷயம். நாங்கள் உண்மையான மனிதர்களுக்குத் தான் நாங்க ஆதரவு தருவோம். அது நீங்களோ மோடியோ  நிச்சயமா இல்லை என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், காயத்ரியின் இந்த ட்வீட் நெட்டிசன்களிடையே கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துயுள்ளது.