நீட் தேர்வால் வந்த விளைவு - 5 பேர் மட்டுமே தேர்ச்சி


Murugan| Last Modified புதன், 13 செப்டம்பர் 2017 (15:43 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி வெறும் இரண்டு மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

 

 
மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பிற்கு பின், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லிக்கு சென்று பிரதமர் உள்ளிட்டோரோடு பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. அதோடு, தமிழகத்திற்கு ஒரு வருடம் விலக்கு வாங்கி தருகிறோம் என தமிழக அரசியல்வாதிகள் தொடர்ந்து உறுதிமொழி அளித்து வந்தனர்.
 
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால்,  நீட் தேர்வில் பனிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண் எடுத்த, அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா, தனது மருத்துவர் கனவு கலைந்ததால், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். 
 
இந்நிலையில், நீட் தேர்வில் தமிழகத்தை சேந்த 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதிலும், 2 பேருக்கு மட்டுமே அரசு கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மற்ற 3 மாணவர்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அதிக கட்டணம் செலுத்தியே சேர்ந்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :