Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சரத்குமாரை பின்னுக்கு தள்ளிய விஷால்-ஜோதிகா


sivalingam| Last Modified செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (00:00 IST)
ஒரு காலத்தில் சரத்குமார் படம் ரிலீஸ் என்றால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்கு உரிமையாளர்கள் போட்டு போட்டுக்கொண்டு ரிலீஸ் செய்வார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். சரத்குமார் நடித்த 'சென்னையில் ஒருநாள் 2' படத்திற்கு தியேட்டர் கிடைக்காத காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளி போவதாக கூறப்படுகிறது.


 
 
வரும் 15ஆம் தேதி வெள்ளியன்று விஷாலின் ‘துப்பறிவாளன்’, ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’, ‘களத்தூர் கிராமம்’, ‘யார் இவன்’ ஆகிய படங்களுடன் சரத்குமாரின்  'சென்னையில் ஒருநாள் 2' படமும் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்தது.
 
ஆனால் துப்பறிவாளன்’ சுமார் 500 தியேட்டர்களிலும், ‘மகளிர் மட்டும்’ 300 தியேட்டர்களிலும், ரிலீஸ் ஆவதால் சரத்குமாரின் ‘சென்னையில் ஒரு நாள்2’ படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன


இதில் மேலும் படிக்கவும் :