திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (19:16 IST)

யாரு சாமி நீங்க? கள்ளநோட்டை நுதன முறையின் புழக்கத்தில் விட்ட கிள்ளாடிகள்

கம்பம் சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் ஏடிஎம் இயந்திரத்தில் கள்ளநோட்டுகள் பல லட்சம் ரூபாய் அளவில் டெபசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   

 
ஜஹாங்கீர் என்பவர் கடந்த சில நாட்களாக பல லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்துள்ளார். இதுகுறித்து வங்கி மேலாளர் ஜோசப் இமானுவேல் தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 
 
இதையடுத்து காவல்துறையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஜஹாங்கீர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அப்பாஸ் மற்றும் கதிரேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இந்த கும்பல் பல லட்சம் ரூபாய் வரை அச்சடித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 500 மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 
 
டெபாசிட் செய்யப்பட்ட நோட்டுகளில் 40 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரே வரிசை எண்கள் உடையதாய் இருந்துள்ளது. இதை வைத்தே இவர்கள் எளிதாக பிடித்துள்ளனர்.