ரஜினி மீது தேனி ரசிகர்கள் புகார்

Rajini
Last Updated: சனி, 30 டிசம்பர் 2017 (13:42 IST)
நடிகர் ரஜினிகாந்த் தங்களை சந்திக்க மறுத்துவிட்டதாக தேனி மாவட்ட ராஜாதி ராஜா ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

 
நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் நாளை வரை நடைபெறுகிறது. 
 
இந்த நாட்களில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அறிவிப்பேன் என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
 
தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டி அருகே அம்மாகுளம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக ராஜாதி ராஜா என்ற பெயரில் ரசிகர் மன்றம் நடத்தி வருகின்றனர். அதில் 200க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் அவர்கள் ரஜினிகாந்த் தங்களை சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
 
ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி தங்கலை புறக்கணித்துவிட்டார். மாவட்ட தலைமை ரசிகர் மன்றமே தங்களை அழைக்கவில்லை. இதுகுறித்து ரஜினிக்கு கடிதம் எழுதியும் தங்களுக்கு பதில் ஏதும் வரவில்லை என்று கூறியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :