2 பேரை கொன்றும் ஆத்திரம் தீராமல் ஆடு, மாடுகளை கொன்ற கொடூர நபர்

Murder
Last Updated: ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (15:10 IST)
தேனி அருகே தாய் மற்றும் சகோதரரை கொலை செய்த நபர் ஆத்திரம் தீராமல் வீட்டில் இருந்த ஆடு, மாடுகளையும் கொலை செய்துள்ளார்.

 
தேனி மாவட்டம் சடையால்பட்டியை சேர்ந்த ஜெயபால் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக போதை பழக்கத்தினால் மன நோயாளியாக பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். வீட்டில் திடீரென கடப்பாரையால் பெற்ற தாய் மற்றும் சகோதரரை குத்தி கொலை செய்துள்ளார். மேலும் வெறி அடங்காமல் மாட்டு கொட்டகையில் இருந்த மாடு, ஆடு மற்றும் நாய் ஆகியவற்றையும் கொலை செய்துள்ளார்.
 
பின் வீட்டின் முன்பு இருந்த குடிசைக்கு தீ வைத்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் அளித்த புகாரி பேரில் காவல்துறையினர் ஜெயபாலை கைது செய்து மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :