ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (12:37 IST)

தமிழகத்தில் விரைவில் ஆளுநர் ஆட்சி? - அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் விரைவில் ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக வலுவிலந்து போனது. மேலும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக ஆட்சி செயல்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள்  தொடர்ந்து கூறி வருகின்றன. அதை நிரூபிக்கும் வகையிலேயே ஆளுநரும் செயல்பட்டு வருகிறார்.
 
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டது முதல் தமிழகத்தில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஆய்வு நடத்துகிறேன் எனக்கூறி பல்வேறு மாவட்டங்களும் சென்ற ஆளுநர் அங்குள்ள உயர் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
 
அண்ணாபல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்தார். தொழில் துவங்க எந்த உதவி வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். மேலும், நிர்மலா தேவி விவகாரத்தில் நியமிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்க, தன்னிச்சையாக செயல்பட்டு அவரே ஒரு விசாரணைக்குழுவை அமைத்துள்ளார். அதோடு, இதில் தலையிட மாநில அரசுக்கு உரிமை இல்லை என அசால்ட்டாக பேட்டியும் கொடுத்தார்.

 
மத்திய அரசின் கட்டுப்பாடில் அதிமுக அரசு செயல்படுகிறது என்கிற புகார் எழுந்துள்ள நிலையில், ஆளுநரின் நடவடிக்கைகள் அதை உறுதி செய்கிறது. மேலும், இங்கு ஆளுநர் ஆட்சிதான் நடக்கிறதோ என்கிற தோற்றத்தையும் அவர் ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எடப்பாடி தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். 
 
எனவேதான், மத்திய அரசுக்கு எதிராக ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தைரியமாக பேட்டியளிக்க துவங்கியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.