Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினிமா டிக்கெட் - கேளிக்கை வரி 2 சதவீதம் குறைப்பு?

வெள்ளி, 13 அக்டோபர் 2017 (14:18 IST)

Widgets Magazine

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்காக வரி 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


 

 
ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருந்த வேளையில், திரைத்துறையினருக்கு 30 சதவீத கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
 
ஆனாலும், ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி என 40 சதவீதத்துக்கு மேல் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருப்பதால், தமிழக அரசு விதித்த கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சினிமா உலகினர் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டது. அரசுக்கும், சினிமா துறையினருக்கும் இடையே இது தொடர்பாக கடந்த 3 நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டு வருகிறது. 
 
சினிமா நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் எனத் தெரிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விருதுநகரில் டெங்கு நுழைந்து விடுமா?- ராஜேந்திர பாலாஜி சவால்

கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. கொசுக்களால் ...

news

10 அமைச்சர்கள், 40 எம்.எல்.ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு - தங்க தமிழ்செல்வன் பேட்டி

அதிமுக கட்சி தற்போது சசிகலா கையில்தான் இருக்கிறது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க ...

news

டெங்குவை கட்டுப்படுத்த ரூ.256 கோடி: மத்திய அரசிடம் கேட்கும் தமிழக அரசு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் தலைவிரித்தாடி வருகின்றது. தினமும் ஐந்து ...

news

தீபாவளி பண்டிகை ; எந்த ஊர் செல்ல எங்கு பஸ் ஏற வேண்டும்?

வருகிற 18ம் தேதி தீபாவளி வருவதையொட்டி, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் 5 ...

Widgets Magazine Widgets Magazine