Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினிமா டிக்கெட் கட்டணம் மேலும் உயர்வு: தமிழக அரசு அனுமதி

Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (15:55 IST)

Widgets Magazine

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Movie Ticket
 

 
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபோது சினிமா டிக்கெட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரியும், மாநில அரசு சார்பில் 30% கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் வேல்லைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
 
தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி கடந்த 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கேளிக்கை வரி 20% சதவீதம் குறைக்கப்பட்டு 10% விதிக்கப்பட்டுள்ளது. இந்த கேளிக்கை வரி அமலுக்கு வந்ததால் சினிமா டிக்கெட் கட்டணத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சினிமா டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.50 அதிகபட்சக் கட்டணம் ரூ.160 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் சென்னையை தவிர மற்ற இடங்களில் உள்ள திரையரங்குகளில் ரூ.140 வரை கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சினிமா என நினைத்தீர்களா? ; விளாசிய நீதிபதி ; திணறிய ஜெய்

இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்த நடிகர் ஜெய்யை நீதிபதி சராமாரியாக கேள்வி எழுப்பினார்.

news

கமல் அரசியல் வருகை பற்றி கருத்து கூறிய நடிகை கெளதமி

நடிகர் கமல் மற்றும் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து, கமலின் தோழியான கௌதமியிடம் ...

news

தோனிக்கு ரசிகர் மன்றம் திறந்த விக்ரம்பிரபு

தோனியின் ரசிகரான விக்ரம்பிரபு, அவருக்கு ரசிகர் மன்றம் திறந்துள்ளார்.

news

பிந்து மாதவி எதுக்காக ‘பிக் பாஸ்’ல கலந்து கொண்டார்னு தெரியுமா?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பிந்து மாதவி கலந்து கொண்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

Widgets Magazine Widgets Magazine