Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விண்ணை முட்டுகிறது முட்டை விலை: ரூ.10 வரை செல்லும் என தகவல்


sivalingam| Last Modified திங்கள், 13 நவம்பர் 2017 (23:26 IST)
முட்டை சாப்பிடாதவர்களே இல்லை என்ற நிலையில் பொதுமக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த முட்டையின் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே போவது நடுத்தர வர்க்கத்தினர்களின் வயிற்றிலு புளியை கரைத்துள்ளது.

 


கடந்த சில வாரங்களுக்கு முன் முட்டையின் சில்லறை விலை ரூ.4 என்று இருந்த நிலையில் இன்று முட்டையின் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இதே நிலை நீடித்தால் ரூ.10ஆக உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ரூ.4.59ஆக நேற்று இருந்த நிலையில் இன்று 15 பைசா அதிகரித்து ரூ.4.74 ஆக உயர்ந்துள்ளது. கோழிப்பண்ணை வரலாற்றில் இந்த விலை தான் அதிகபட்ச விலை என்று கூறப்படுகிறது. கோடை காலத்தில் அதிக கோழிகள் விற்பனை செய்யப்பட்டதால் தற்போது முட்டை உற்பத்தி குறைந்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே விலை உயர்ந்து கொண்டிருப்பதாகவும் கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :