Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கனமழை எதிரொலி: நாமக்கல் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்தது

namakkal busstand" width="600" />
sivalingam| Last Modified புதன், 1 நவம்பர் 2017 (13:03 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.


 
 
இந்த கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிதல், ஏரிகள் உடைந்ததால் ஊருக்குள் நீர் புகுதல், பழைய கட்டிடங்கள் இடிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
 
இந்த நிலையில் நாமக்கல் பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கூரை சற்றுமுன்னர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த கடைகள் மற்றும் கடைகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :